கனவின்றி விழித்தோர் யார்
களையின்றி முளைத்தோர் யார்
களம் காணா வென்றோர் யார்
நிழல் தாண்டா நின்றோர் யார்
தடையின்றி தழைத்தோர் யார்
விடையின்றி விழுந்தோர் யார்
சிதைவின்றி சிறந்தோர் யார்
அதை கண்டு பயந்தோர் யார்
வசையின்றி வளர்ந்தோர் யார்
நசையின்றி நகர்ந்தோர் யார்
விசைகொண்டு திசைகண்டு
விளையாட நீ வா வா...
- ரா ப ஈ
Comments
Post a Comment