மழையொளி - ரா ப ஈ (RBE)
காற்றோடையின் அலை செலுத்தும் கார்மேக கலங்கள் சில,
கரு நீல வான்வெளியில் உருவங்கள் பல கொண்டு;
களிப்போடு சென்றனவே கண்டயிடம் விதியின்றி!
கதிரவனின் கண்கட்டி, உதிரி மலர் மழை தூவி;
சென்ற இடம் செழிப்பாக எங்கும் துளி மணியாக!
மங்கிய கரும் சூழலிலும் மண்ணில் விதையின் முகம் துளிர..
துளிர் இலையில் துளி வழியும் அழகதையும் கண்டிடவே,
கண்கட்டை கலைத்திங்கு கதிரொளியும் வீசியதோ!?
துளி வழியே ஒளி தழுவி ஒன்றிணைய- கருமுகிலும்
நாணமுற்ற வானில் பல வண்ணம் தோன்ற விலகியதோ!?
- ரா ப ஈ (RBE)
Comments
Post a Comment